பெண் கொலை வழக்கில் கிளி அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் 2 பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஆக்ராவைச் சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா, அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி இந்தக் கொலையை செய்தது தெரிய வந்தது. மேலும், வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே, தனது வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த கிளி, மனைவி நீம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சரியாக சாப்பிடாமல், நடவடிக்கைகளிலும் மாற்றத்தோடு இருந்ததை விஜய் ஷர்மா கவனித்துள்ளார். இதனால், மனைவி கொலை செய்யப்பட்டதை இந்த கிளி பார்த்திருக்கலாம் என அவருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் அவர் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை கிளியிடம் கூறியுள்ளார். அப்போது அவர் தனது மருகமன் ஆசு பெயரை கூறியதும், கிளி ஆவேசமடைந்து ஆசு.. ஆசு… என கத்தியுள்ளது. இதனால், கொலையாளி தனது மருமகனாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனே போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். உடனே போலீசாரும் கிளி முன்பு பலரின் பெயர்களை கூறிய நிலையில் ஆசுவின் பெயரை கூறிய போது மட்டும் கிளி கத்தியது.
இதையடுத்து போலீசார் ஆசுவை பிடித்து விசாரித்ததில், ஆசு தனது நண்பர் ரோனியுடன் சேர்ந்து நீலம் ஷர்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், கிளியின் சாட்சியத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசு, ரோனி மாசி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 2 பேருக்கும் தலா ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டது.
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.…
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது…
கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
This website uses cookies.