குரங்கம்மை வந்தால் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக் கூடாது? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 11:26 am
Monkey Pox Warn - Updatenews360
Quick Share

குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை

•குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமை படுத்த வேண்டும்

•சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

•குரங்கம்மை பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும்

•சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடாதவை

•குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது.

•குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம்.

•குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது

•குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

Views: - 547

0

0