குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது..!!

23 February 2021, 9:35 am
gujarat vote poll - updatenews360
Quick Share

அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் கடந்த 21 ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பாஜவிடம் இருந்து வருகிறது. 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவை தவிர ஜூனாகத் மாநகராட்சியில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாத், நரன்புரா பகுதி வாக்குப்பதிவு மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மாநில முதலமைச்சர் விஜய்ருபானி தனது மனைவியுடன் ராஜ்கோட் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். குஜராத் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆறு நகராட்சி நிறுவனங்களும் சராசரியாக 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று 6 மாநகராட்சிகளிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Views: - 12

0

0