தாலியை மாறி மாறி கட்டிக்கொண்ட தம்பதி : ஆண் பெண் சமம் என்பதை நிரூபித்த ஜோடி!!

8 May 2021, 12:11 pm
Knot Couples - Updatenews360
Quick Share

மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி மாறி மாறி தாலியை கட்டிக் கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த தனுஜா பாட்டீல், ஷார்துல் கதம் ஆகியோர் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட போது ஷார்துல் கதம் தனது காதலியிடம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை குறிக்கும் வகையில் திருமணம் இருக்க வேண்டும் என கூறினார்.

அதற்கு காதலியும் சம்மதிக்க, இருவரும் தாலியை மாறி மாறி கட்டிக்கொள்ள முடிவெடுத்தனர். இவர்களின் முடிவுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஜோடிகள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.

பின்னர் இருவரும் தாலியை மாறி மாறி கட்டிக்கொண்டனர். சாகும் வரை இருவரது கழுத்தில் இந்த தாலி இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்தனர். இந்த வினோத திருமணத்தின் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 171

0

0