கபடி போட்டியை கண்டுகளிக்க வந்த கூட்டம் : அரங்கம் சரிந்து விழுந்து பலர் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2021, 8:44 am
Hall Collapsed -Updatenews360
Quick Share

தெலுங்கானா : 47 ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டியில் மக்கள் அமர்ந்து கண்டுகளிக்க கூடிய அரங்கம் சரிந்து விழுந்ததில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் 47 ஆம் ஆண்டு கபடி போட்டி நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

திடீரென மக்கள் அமர்ந்து கண்டுகளிக்க கூடிய அரங்கம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் அரங்கத்தில் சிக்கிய பலரை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆபத்தான நிலைமையில் 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 172

0

0