2 வயது பெண் குழந்தையை பெற்ற தந்தையே நாசம் செய்த கொடுமை : வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 11:59 am
Daughter Abuse by Father - Updatenews360
Quick Share

பீகார் : மனைவியை வெளியே தள்ளிவிட்டு 2 வயது குழந்தையை நாசம் செய்த தந்தையின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகாரில் வீட்டு வேலை பார்த்து வரும் பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தை மற்றும் கணவருடன் செடல்லி அருகே உள்ள குரகிராமில் புதியதாக இடம்பெயர்ந்தார். இருவருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் கணவரிடம் இருந்து அப்பெண் பிரிந்தார்.

தன் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த அப்பெண், கடந்த மாதம் வேறு ஒரு நபரை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்த வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அப்பெண்ணின் புதிய கணவர் வேலைக்கு சென்றார்.

அந்த நேரம் பார்த்து வந்த முன்னாள் கணவர், மனைவியை வெளியே தள்ளிவிட்டு கதவை தாழிட்டு உள்ளே இருந்த 2 வயது மகளை நாசம் செய்துள்ளான். மேலும் வெளியே இந்த விஷயத்தை கூறினால் கொன்றுவிடுவேன் என மனைவியை மிரட்டி சென்றுள்ளார்.

இதையடுத்து அப்பெண் உள்ளே வலியால் அழுத குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இது குறித்து தனது உறவினரிடம் அப்பெண் கூற, அந்த உறவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பின்னர் முன்னாள் கணவன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கவதல்துறையினர் கைது செய்தனர். இரண்டு வயது மகளை தந்தை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 302

0

0