சொத்து பங்கீட்டில் பெண்களுக்கும் சம உரிமையா..! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன தெரியுமா..?

11 August 2020, 1:16 pm
Quick Share

இந்து வாரிசு சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டம் தொடர்பான வழக்கு, இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொத்து பங்கீட்டில் பெண்களுக்கு ஏன் உரிமை இல்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, பெற்றோரின் சொத்தை பிரித்து பங்கு வழங்கும்போது ஆண் பிள்ளைகளை போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும். பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு என்பதாகும்.

Views: - 17

0

0