கரையை கடந்தது குலாப் புயல்…! வானிலை மையம் தகவல் ..!!

Author: Udhayakumar Raman
27 September 2021, 12:18 am
Quick Share

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குலாப் புயல் கலிங்கப்பட்டினம்-கோபால்பூர் இடையே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கலிங்கப்பட்டினம்-கோபால்பூர் இடையே புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக ஏற்கனவே ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அதீத கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.அங்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், குலாப் புயல் கரையைக் கடந்து உள்ளது. குலாப் புயல் கரையை கடந்த போது 75-85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 154

0

0