ஒரு நாளில் இத்தனை முறையா? கட்டுக்கடங்காத கள்ளக்காதலியின் கதையை முடித்த மருத்துவர்!!

2 November 2020, 5:21 pm
Illegal Love Murder - Updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : தோணும் போதெல்லாம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கள்ளகாதலியின் டார்ச்சரை தாங்க முடியாமல் மருத்துவர் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே 33 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பெண் அப்பகுதியல் கிளினிக் வைத்து நடத்தி வந்த இஸ்மாயில் என்ற மருத்துவரிடம் பழக்கம் ஏற்பட, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மருத்துவருக்கும் ஏறக்னவே திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ள நிலையில், கள்ளக்காதலியுடன் உள்ள பழக்கத்தை விடுபட முடியவில்லை. இருப்பினும் இருவரும் அவ்வப்போது நெருக்கமாகவே இருந்தனர்.

தினமும் மருத்துவரை தொந்தரவு செய்த வந்த கள்ளக்காதலி, ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக வசிக்கலாம் என கூறியுள்ளார். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என மருத்துவர் சமாளித்து வந்த நிலையில், இருவருக்கும் இதனால் பிரச்சனை தொடர்ந்து வந்தது.

இதையடுத்து கள்ளக்காதலியை கொலை செய்ய முயன்ற மருத்துவர், சண்டிகருக்கு கள்ளக்காதலியை அழைத்து சென்று, ஒரு ரூம் எடுத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் மருத்துவர் அப்பெண்ணிற்கு மயக்க ஊசி செலுத்தி, துணியால் மூச்சடைத்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து கொலை செய்த கள்ளக்காதலியை குருஷேத்திர பாகுதியில் வீசி விட்டு மருத்துவர் நிம்மதியாக ஊர் திரும்பிவிட்டார். இந்த நிலையில் மனைவியை காணவில்லை என அப்பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து பெண்ணின் செல்போன் நம்பருக்கு வந்த அழைப்புகளில் அதிகமாக இஸ்மாயில் எண் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் இஸ்மாயிலிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரின் கள்ளக்காதலும் வெளிச்சத்திற்கு வந்தது.

தொடர்ந்து தன்னை உடலுறவுக்கு அழைத்ததாலும், தனியாக குடித்தனம் செய்ய வேண்டும் என டார்ச்சர் செய்ததால் கொலை செய்ததாக மருத்துவர் இஸ்மாயில் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து மருத்துவர் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

Views: - 50

0

0