2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: நாடாளுமன்றம் வந்தடைந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

Author: Rajesh
1 February 2022, 10:07 am
Quick Share

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் ஆகும்.

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வருமான வரி உச்சரவம்பு அதிகரிக்கப்படுமா?, வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் எழுந்துள்ளன. மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். பட்ஜெட் விவரங்கள் அடங்கிய லேப்டாப் உடன் நிதியமைச்சர் குடியரசுத்தலைவரை சந்தித்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் சந்திக்கும் நிகழ்வு பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின்னர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் புறப்படுகிறார். மேலும், மத்திய பட்ஜெட் நகல் அனைத்தும் நாடாளுமன்றம் கொண்டுவரப்பட்டது.

Views: - 1231

0

0