கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியருகே சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது.
இந்த விடுதியில் இங்கிலாந்து நாட்டில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு தனியாக சுற்றி பார்ப்பதற்காக நடந்தபடி சென்றுள்ளார்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை அணுகி சில்மிசத்தில் ஈடுபட்டு தொந்தரவு செய்து உள்ளது. இதன்பின் தனியாக வந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவரை கும்பல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளது.
அந்த நேரத்தில், சுற்றுலா பயணி தங்கியிருந்த விடுதியின் சமையல் கலைஞர் ஒருவர் அந்த பகுதியில் இருந்துள்ளார். அவர் ஓடி சென்று அந்த கும்பலின் பலாத்கார முயற்சியை தடுத்து உள்ளார்.
இதனால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அந்த கும்பலில் ஒருவர் உள்ளூரை சேர்ந்த வாடகை வாகன ஓட்டுனர் ஆவார். பலாத்கார முயற்சி தோல்வியடைந்ததும், அந்த கும்பல் வெளிநாட்டு பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
இவ்வளவு நடந்தும் இதுபற்றி போலீசில் அந்த பெண் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. போலீசார் கூறும்போது, கும்பலில் ஒருவர் அந்தோணி என்பவர் வாகன ஓட்டுனர்.
அந்த பெண்ணின் பெற்றோர் இதற்கு முன் கேரளா வந்தபோது, அவரது வாகனத்திலேயே பயணித்து உள்ளனர். இந்த பெண்ணின் மொபைல் போன் எண் அந்தோணிக்கு கிடைத்து உள்ளது.
அதன் வழியே, இங்கிலாந்து பெண்ணுக்கு அவர் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
எனினும், அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.