“பாபு வெளியே வா பாபு“ : மணமேடையில் இருந்த காதலனை வாசலில் நின்று கூப்பாடு போட்டு கதறி அழைத்த காதலி!!

13 July 2021, 5:24 pm
Babu- Updatenews360
Quick Share

திருமணமாகாமல் மூன்று வருடம் தன்னோடு வாழ்ந்த ஆண் நண்பர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்வதை அறிந்த காதலி திருமண மண்டபத்துக்கு வெளியே கூச்சலிட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியபிரதேசத்தில் போபாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் தன்னோடு பணியாற்றிய ஆண் நண்பருடன் மூன்று வருடங்களாக ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆண் நண்பருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, ஹோஷங்கபாத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இதையறிந்த இளம்பெண், மண்டபத்திற்கு வெளியே கண் கலங்கிய படி பாபு பாபு என கதறி கூச்சலிட்டார். பாபு வெளியே வா பாபு, என கதறி துடித்தார். ஆனால் அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

3 வருடம் தன்னுடன் வாழ்ந்த காதலன், திருமணம் செய்ததை எண்ணி காதல் தோல்வியில் விரக்தியடைந்த பெண் கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பெண்ணிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Views: - 193

0

0