பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிப்பு: சண்டிகர் அரசு அறிவிப்பு…!

7 November 2020, 9:08 am
chandikhar gvt - updatenews360
Quick Share

சண்டிகரில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த தீர்ப்பில், தீபாவளி தினத்தன்று பொது இடங்களில் 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த சூழ்நிலையில் கொரோனா பரவலையொட்டி ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை விதித்து 3 மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

Crackers - Updatenews360

இதனைதொடர்ந்து, கொரோனா தொற்று பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு சண்டீகரில் மாநிலத்தில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 28

0

0