படக்காட்சிகளை மிஞ்சிய சிலிண்டர் லாரி விபத்து : சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் வெடித்து சிதறியது.. வானில் பறந்த சிலிண்டர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 1:57 pm
Cylinder Lorry Blast - Updatenews360
Quick Share

சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அமராவதி அருகே தத்தவாடா கிராமத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறியது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது. அந்த லாரி தத்தவாடா கிராமம் சமீபத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் நேற்று நள்ளிரவு நேரத்தில் வெடித்து சிதறின. தீ விபத்து ஏற்பட்ட உடன் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த தீ விபத்து காரணமாக அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், அருகில் இருந்த கிராம மக்கள் ஆகியோர் கடும் அச்சமடைந்தனர். சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சத்தம் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வரை கேட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், போலீசார் ஆகியோர் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி தீயை அணைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

Views: - 259

1

0