இன்று தொடங்குகிறது ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா…!!!

Author: Aarthi
16 October 2020, 8:49 am
Quick Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது.

எழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. அதையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை வஜ்ர கவச ஆபரணத்தில் தங்கத் திருச்சி வாகனம், இரவு பெரிய சேஷ வாகனம் நடைபெறுகிறது. நாளை காலை சிறிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 18-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 19-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம் நடைபெற உள்ளது.

20-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கருட வாகனம் , 21-ந்தேதி காலை அனுமந்த வாகனம், மாலை வசந்த உற்சவம், புஷ்ப வாகனம், இரவு யானை வாகனம், 22-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 23-ந்தேதி காலை சர்வ பூபால வாகனம், இரவு குதிரை வாகனம், 24-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், கண்ணாடி மாளிகையில் ஸ்நாபன திருமஞ்சனம், மதியம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு திருச்சி வாகனம் நடக்கிறது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Views: - 40

0

0