நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி: இணையதளத்தில் இருந்து நீக்கம்….!!

17 October 2020, 11:58 am
neet - updatenews360
Quick Share

புதுடெல்லி: புள்ளிவிவரப் பட்டியலில் குளறுபடி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகள் மாநில வாரியாக புள்ளிவிவரப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் திரிபுரா, உத்தராகண்ட் மாநில பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

neet result - updatenews360

திரிபுரா மாவட்டத்தில் 3,536 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தார்கள். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் திரிபுராவில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88,889 என்று குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 37,301 பேர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் பட்டியல் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தவறுகளை திருத்தம் செய்து புதிய முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Views: - 18

0

0