மருத்துவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த நர்ஸ்.. மருத்துவமனையில் நடந்த கூட்டுப் பாலியல் முயற்சி..!

Author: Udayachandran RadhaKrishnan
13 செப்டம்பர் 2024, 6:09 மணி
Nurse
Quick Share

சமீபத்தில் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவரை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் மக்கள் மனதில் இன்னும் ஆறாத நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த கங்காபூரில் ஆர்பிஎஸ் ஹெல்த் கேர் சென்டர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. என்ன நடந்தது?

இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்புறவு முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தின் போது மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரை மருத்துவர் குமார், மற்றும் அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுனில் குமார் குப்தா மற்றும் அவதேஷ் குமார் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க செவிலியர் தன் கையில் கிடைத்த பிளேடு கொண்டு மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதையடுத்து, மூவரிடம் இருந்து தப்பிய செவிலியர் மருத்துவமனையில் மறைந்திருந்து காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க: மருத்துவர் காந்தராஜ் மீது தமிழ் நடிகைகள் பரபரப்பு புகார் : நிருபர்கள் கேட்ட கேள்வி… மழுப்பிய ஆர்கே செல்வமணி!

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர்.

விசாரணையில் மருத்துவர் உள்பட மூவரும் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

செவிலியரின் செயல்பாடு குறித்து காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது, அதே சமயம் மக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து… தொடரும் சோகம் : நடந்தது என்ன?
  • Views: - 225

    0

    0