பத்ம விருதுக்கு தகுதியுள்ளவர்களை பொதுமக்களே பரிந்துரைக்கலாம் : பிரதமர் மோடி அழைப்பு!!

11 July 2021, 6:11 pm
Modi Award - Updatenews360
Quick Share

டெல்லி : பத்ம விருதுக்கு தகுதியுள்ளோர் பெயரை பொதுமக்களே அரசுக்கு பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் செயற்கரிய செயலை செய்த திறமை மிகுந்த ஏராளமானோர் இருப்பதாகவும் ஆனால் அவர்களில் பலரைப் பற்றி வெளியே தெரியாத நிலையே இருப்பதாகவும் பிரதமர் மோடி தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சிறந்த செயல்களை புரிந்தவர்கள் பற்றி தெரிந்தால் அவர்கள் பற்றி பத்மா அவார்ட்ஸ் என்ற பெயரிலான வலைத்தளத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என பிரதமர் கூறியுள்ளார். பத்ம விருதுக்கு தகுதியுள்ளோரை பரிந்துரைக்க செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் பிரதமர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 84

0

0