மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை….!!!

Author: Aarthi
16 October 2020, 5:08 pm
neet today - updatenews360
Quick Share

செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 14ம் தேதி என 2 கட்டமாக நடந்த நீட் தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

கொரோனா பரவல் காரணமாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுத பதிவு செய்திருந்தனர். செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதில் நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

neet-exam-updatnews360-1

கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் சிக்கிய மாணவர்கள் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று முன்தினம் விடுபட்டவர்களுக்கான மறு தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர்.

இதனையடுத்து, 2 கட்டமாக நடைபெற்ற நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான www.nta.ac.in மற்றும், www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Views: - 70

0

0