’10 ரூபாய் கூட இல்லாம…கார் வாங்க வந்துட்டியா?’: விவசாயியை ஏளனப்படுத்திய விற்பனையாளர்…மாஸாக பதிலடி கொடுத்த சம்பவம்..!!

Author: Rajesh
24 January 2022, 5:50 pm
Quick Share

கர்நாடகா: துமகுரு மாவட்டத்தில் உள்ள கார் ஷோரூமிற்கு சென்ற விவசாயியை உதாசீனப்படுத்திய மேலாளருக்கு விவசாயி தக்க பதிலடி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் பிக்கப் டிரக் வாங்க விவசாயி கெம்பேகவுடா என்பவர் சென்றுள்ளார். விவசாயியின் எளிமையான தோற்றத்தை பார்த்த மேலாளர் அவரை அவமானப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.

Image

‘உன்கிட்ட எல்லாம் 10 ரூபாய் கூட இருக்காது. நீ கார் வாங்க வந்துட்டியா?’என விற்பனையாளர் விவசாயியை சற்றும் யோசிக்காமல் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி கெம்பேகவுடா ‘என்னையே அசிங்கப்படுத்திட்டியா. இந்தா இரு வாரேன்’ என ஷோரூமை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கார் ஷோரூமிற்கு வந்த விவசாயி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். அப்படி அந்த விவசாயி என்ன செய்தார் தெரியுமா?….கார் வாங்க தேவையான ரூ.10 லட்சத்தை சுளையாக எடுத்து வந்து மேலாளரிடம் நீட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விவசாயி தனது நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் இதில் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இறுதியாக விற்பனையாளர் விவசாயியிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. விவசாயி விற்பனையாளரை திட்டிக்கொண்டே “இவ்ளோ பேசினதுக்கு அப்புறம் நான் உன் கடையில கார் வாங்க மாட்டேன்” என கூறி ரூ.10 லட்சத்துடன் கெத்தாக வெளியேறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் மஹிந்ரா ஷோருமில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3971

0

0