மேற்கு வங்காளம் மாநிலத்தில் துர்காப்பூர் மாவட்டம் கோபால்மத் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினர்.
உயிரிழந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது உயிரிழந்தது துர்காப்பூரின் பினாசிடி நாகபள்ளி பகுதியை சேர்ந்த அவினாஷ் ஜன் (வயது 19) என தெரிய வந்தது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்திய நிலையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இதையடுத்து அவினாசுக்கு, ஆப்ரீன் கட்டூன் என்பவருடன் காதல் ஏற்பட்டு அது தகராறில் முடிந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, துர்காப்பூரின் நைன் நகரை சேர்ந்த ஆப்ரீனிடம் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போதுதான் அவருக்கு புது காதலரான பிஜூபாரா பகுதியை சேர்ந்த பிட்டு குமார் சிங் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது.
ஆப்ரீன் கூறிய தகவலை கொண்டு, பிட்டுவை பிடித்து விசாரித்ததில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையில் ஆப்ரீனுக்கு பிட்டு மீது காதல் வந்ததும் பழைய காதலரை விட்டு ஒதுங்கி இருக்க விரும்பியுள்ளார். ஆனால், அதனை அறியாத அவினாஷ் தொடர்ந்து ஆப்ரீனை காதலித்து வந்து உள்ளார்.
இதனால், இருவரும் சேர்ந்து அவினாஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி, விருந்து ஒன்றில் கலந்து கொள்ளும்படி அவரை அழைத்து உள்ளனர்.
பிட்டு வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது, அவினாசுக்கு மதுபானம் ஊற்றி கொடுத்து உள்ளனர்.
இதில் போதை ஏறியதும், ஆப்ரீன் இரும்பு தடியை எடுத்து அவினாஷின் தலையில் அடித்து உள்ளார். அவினாஷ் மயங்கி, விழுந்ததும், பிட்டு கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்து அவினாஷின் தலையில் அடித்து, உடைத்து உள்ளார்.
இந்த தாக்குதலில் அவினாஷ் உயிரிழந்ததும், இருவரும் சேர்ந்து அவரது கைகளை கட்டி உள்ளனர். அதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டாரா? அல்லது உயிரிழந்த பின்னர் கைகளை கட்டினார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
அதன்பின்பு, இரு சக்கர வாகனத்தில் உடலை ஏற்றி சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசி விட்டு சென்றுள்ளனர் என காவல் அதிகாரி கூறியுள்ளார்.
அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களை துர்காப்பூர் சப்-டிவிசனல் கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.