டெல்லியில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!!

13 July 2021, 10:39 am
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் தென்மேற்கு பருவமழை இன்று துவங்கியதை அடுத்து பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

டெல்லியை ஒட்டியுள்ள பரீதாபாத், கூர்கான் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. பருவமழை துவங்கியதை வானிலை மையமும் உறுதி செய்தது. கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. பருவமழை துவங்குவதற்கு முன்னர் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,

இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழையானது டெல்லி மற்றும் கூர்கான், பரிதாபாத், லோனி தேகாட், நொய்டா, கோஹானா, சோனிபட், பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது பலத்த காற்று வீசும் என தெரிவித்திருந்தது.

முன்னதாக கடந்த 10ம் தேதியே பருவமழை துவங்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. தற்போது, பருவமழை துவங்கியதை தொடர்ந்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

Views: - 151

0

0