நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மனு : உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி..!

11 September 2020, 5:16 pm
Quick Share

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

நாடு மழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில் தேசிய தேர்வு முகமை தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், கொரோனா அச்சம் காரணமாக தேர்வை நடத்துவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பரவல் குறையும் வரை தேர்வை ஒத்திவைக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விட்டு வரும் நிலையில் மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் மன்றாடி வருகின்றனர்.

எனினும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பொதுநல தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், நீட் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதுபதிகள் கொண்ட அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீட் தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி அதன் அடிப்படையில் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறினார்.

Views: - 6

0

0