தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ்.
அவ்வாறு தினந்தோறும் பள்ளிக்கு வரக்கூடிய ராமதாஸ் அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் பள்ளி நேரத்தில் அந்த பெண்ணுடன் ராமதாஸ் இருப்பதை அறிந்த கிராம மக்கள் அந்த பெண்ணின் கணவருடன் சேர்ந்து ராமதாசை பள்ளியில் இருந்து இழுத்து வந்து கிராமம் மத்தியில் மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வராவ்பேட்டை போலீசார் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் ராமதாசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக நடத்தி வருகின்றனர் .
பள்ளியில் மாணவர்களுக்கு நல்ல போதனை செய்து இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக திகழக்கூடிய ஆசிரியர் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஆசிரியரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து ஆசிரியர் சமூகம் இது போன்ற சிலரால் அவப்பெயர் ஏற்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.