35 கிலோ மீட்டர் பின்னோக்கி ஓடிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…பதற வைக்கும் வீடியோ..!!

Author: Aarthi Sivakumar
18 March 2021, 11:48 am
train back - updatenews360
Quick Share

டேராடூன்: தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால், பிரேக் போட முயன்று கட்டுப்பாட்டை இழந்த ரயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடியது. அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளாததால் பயணிகள் உயிர் தப்பினர்.

உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரெயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளாததால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பினர்.

தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால் பிரேக் போட்ட ரயில் ஓட்டுனர், ஒரு மாடு மீது மோதிவிட்டதாகவும் அதனால் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து ரயில் பின்னோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது.ஒரு ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வேகமாக பின்புறம் கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Views: - 101

0

0