‘தேசிய விளையாட்டு நாள்’ : ட்விட்டரில் டிரெண்டாகும் #nationalsportsday ஹேஷ்டேக்..!

29 August 2020, 10:49 am
Quick Share

தேசிய விளையாட்டு நாளான இன்று அதை கொண்டாடும் விதமாக விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள், ஆர்வலர்கள் என பலரும் ட்விட்டரில் #nationalsportsday ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் இந்திய தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம் நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாக உள்ளது. மேலும், தேசிய விளையாட்டு நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி, குடியரசுத் தலைவரால், விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று இந்திய தேசிய விளையாட்டு நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, #nationalsportsday என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது. இதில் விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.