“முன் அறிவிப்பில்லாத ஊரடங்கால் அதிக பாதிப்பு தினக்கூலிகளுக்கு தான்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

9 September 2020, 3:38 pm
Quick Share

முன் அறிவிப்பில்லாத ஊரடங்கு இளைஞர்களின் எதிர்காலத்தின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம், வேலையின்மை போன்ற பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

மேலும், பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனாவிற்கு எதிரான போர் 21 நாட்களில் முடியும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் தொடர்ச்சியான ஊரடங்கால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட ஏழை மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சி மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

ஆனால், அந்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இது மட்டும் இன்றி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவ வேண்டுமென்கிற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், அத்தகைய கோரிக்கைகளுக்கு மாறாக 15 முதல் 20 கோடீஸ்வரர்களுக்கு மத்திய அரசு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் வரியை ரத்து செய்துள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டது கொரோனாவிற்கு எதிராக அல்ல, ஏழைகளுக்கு எதிராகவே. இளைஞர்களின் எதிர்காலத்தின் மீதான தாக்குதல் கொரோனா ஊரடங்கு” எனவும் ராகுல் காந்தி அந்த வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.

Views: - 0

0

0