மணமகளை அழைத்து சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பலியானதால் திருமணம் நிறுத்தம் : ஆந்திராவில் சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2021, 4:51 pm
ஆந்திரா : பிரகாசம் மாவட்டத்தில் திருமணத்திற்காக மணமகளை அழைத்துச் சென்ற வேனில் இருந்து தவறி விழுந்து 4 பேர் பலியானதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சோமேபல்லில் நடைபெறவிருந்த திருமணத்திற்காக மணமகளை உறவினர்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
போலேரோ வாகனத்தில் 16 பேர் பயணித்த நிலையில் பின்னால் கதவில் அமர்ந்தபடி 6 பேர் பயணித்துள்ளனர். வேன் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் சிறு பள்ளத்தில் இறங்கி ஏறியதில் பின்கதவு கீழே சரிந்தது.
இதில் பயணித்த ஆறு பேர் கீழே விழுந்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து 108 வாகன சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மணமகளுக்கு எந்தவித காயமின்றி தப்பிய நிலையில் திருமணத்திற்காக சென்ற உறவினர்கள் 4 பேர் இறந்துள்ளது திருமண வீட்டாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காலை 11 மணிக்கு நடக்கவேண்டிய திருமணம் இந்த விபத்து காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
0
0