தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்ற வேன் : ரூ.50 லட்சத்துடன் ஓட்டுநர் மாயம்

Author: Udayaraman
28 July 2021, 6:06 pm
Andhra Escape - Updatenews360
Quick Share

ஆந்திரா : பிரபல தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டு 50 லட்ச ரூபாயுடன் வேன் டிரைவர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக 50 லட்ச ரூபாய் பணத்துடன் நேற்று இரவு தனியார் ஏஜென்சிக்கு சொந்தமான வேன் சென்றது.

ஏடிஎம் மையத்தை அடைந்தவுடன் வேனில் இருந்த பாதுகாவலர் கீழே இறங்கினார். அப்போது வேன் ஓட்டுநர் போலைய்யா திடீரென்று வேனை வேகமாக ஓட்டி பணத்துடன் தப்பி சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவன உரிமையாளருக்கு இது பற்றி தகவல் அளித்தார்.இதுபற்றி தகவல் அறிந்த ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் நெல்லூர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து 50 லட்ச ரூபாய் பணத்துடன் எதப்பி சென்ற ஓட்டுநர் போலையா மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 167

0

0