ரகசிய திருமணம் செய்து கொண்ட கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி

12 January 2021, 7:46 pm
Quick Share

ஆந்திரா: ஆந்திராவில் ரகசிய திருமணம் செய்து கொண்ட கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் மால்க்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாத்தாஜி நாயுடு.தாத்தாஜி நாயுடு அதே பகுதியில் உள்ள கொவ்வூரு கிராமத்தை சேர்ந்த பாவனி என்ற பெண்ணை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ரகசிய கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாவணி பலர் முன்னிலையில் எனக்கு தாலிகட்டி ஊரறிய மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.
பவானியின் கோரிக்கையை தட்டி கழித்து வந்த தாத்தாஜி நாயுடு, நேற்று பாவனியை சந்திப்பதற்காக கொவ்வூரு கிராமத்திற்கு சென்றார்.

மாலை வரை இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு பேரும் ஊர் சுற்றிய நிலையில் மாலை மயங்கிய பின் பாவனியை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக அழைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்துகொண்டிருந்த பாவனி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாத்தாஜி நாயுடுவின் முதுகில் குத்தினார். சரிந்து விழுந்த தாத்தாஜி நாயுடுவின் முகம், மார்பு ஆகிய இடங்களிலும் கத்தியால் குத்திய பாவனி அவரை படுகொலை செய்தார்.

பின்னர் தாத்தாஜி நாயுடு தாய்க்கு போன் செய்த பாவனி, உங்கள் மகனை நான் கொலை செய்துவிட்டேன். அவருடைய உடல் இந்த இடத்தில் கிடக்கிறது என்று அந்த இடத்தை குறிப்பிட்டு தகவல் அளித்தார். அங்கு வந்து பார்த்த தாதாஜி நாயுடு பெற்றோர் தங்களுடைய மகன் கொலை செய்து கிடப்பதை கண்டு அழுது புலம்பினர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தாத்தாவின் நாயுடு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து பாவனியை கைது செய்தனர்.

Views: - 7

0

0