”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 2:02 pm
Andhra Woman Threatening -Updatenews360
Quick Share

தெலங்கானா : மின்கட்டணம் செலுத்தாத வீட்டிற்கு மின் இணைப்பை துண்டிக்க கம்பம் ஏறிய ஊழியரை, கல்லை கொண்டு மிரட்டிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் காட்ணப்பள்ளி கிராமத்தில் மின்சார கட்டணம் செலுத்தாத வீட்டிற்கான மின் இணைப்பை துண்டிக்க அரசு மின் வாரிய ஊழியர் சென்றார்.

அப்போது அரசு ஊழியரிடம் நாளை மின் கட்டணத்தை செலுத்தி விடுவதாக வீட்டின் உரிமையாளரான பெண் தெரிவித்துள்ளார். ஆனால் மின் ஊழியர், இணைப்பை துண்டிக்க மின்கம்பத்திற்கு ஏறியபோது ஆத்திரமடைந்த அந்த பெண் கையில் கல்லை கொண்டு ஊழியரை கீழே இறங்குமாறு மிரட்டினார்

கல்லை கொண்டு மிரட்டியே ஊழியரை இறங்க வைத்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 142

0

0