கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சதீஸ் ஜார்கிகோளி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “பாஜக., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்து, இந்துத்துவா என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் இந்து என்ற சொல் பெர்சியாவை சேர்ந்தது. அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தது.
இந்து சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இந்து என்ற சொல்லின் அர்த்தம் மோசமானது. அந்த சொல் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள இணையத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். இந்து என்ற சொல் இந்தியாவுக்கு சேர்ந்தது அல்ல ” என்று பேசினார்.
சதீஸ் ஜார்கிகோளியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்துக்களை அவமதிப்பதாகவும் ஆத்திரமூட்டுவதாகவும் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
“இந்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சிக்கும் இந்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் ஆதரிக்கிறது, அவருடைய கருத்தை ஏற்கவில்லை” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கூறினார்.
இந்த நிலையில், தனது சர்ச்சை பேச்சு குறித்து இன்று சதீஸ் ஜார்கிகோளி கூறுகையில், “நான் தவறு செய்தேன் என்பதை அனைவரும் நிரூபிக்கட்டும். நான் தவறு செய்திருந்தால், நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன், என் கருத்துக்காக மன்னிப்பு கேட்பேன்” என்று தெரிவித்தார்.
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
This website uses cookies.