ஆட்டுக்கு தாலிக் கட்டிய இளைஞர் : திருமண தோஷம் நீங்க விநோத பரிகார பூஜை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 9:57 pm
Marriage With Goat - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருமணமாக தோஷம் இருப்பதால் ஆட்டுடன் இளைஞருக்கு திருமணம் நடத்தி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நூஜிவீடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரமேஷ். அவருக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்க்கும் படலம் துவங்கியது.

இந்த நிலையில் ரமேசுக்கு தார தோஷம் இருப்பதாகவும், எனவே அவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெறும் என்றும் அவருடைய ஜாதகத்தை பார்த்து பலன் கூறியவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தார தோஷத்திற்கு பரிகாரமாக ரமேசுக்கு முதலில் ஆடு ஒன்றுடன் கோவிலில் வைத்து திருமணம் நடத்த வேண்டும் என்றும், பின்னர் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தெலுங்கு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரிலுள்ள நவகிரக கோவிலில் இளைஞர் ரமேஷ் ஆடு ஒன்றை திருமணம் செய்து தார தோஷ பரிகாரம் செய்து கொண்டார்.

Views: - 604

0

0