முன்னாள் முதலமைச்சரின் சிலையை உடைத்து தெருவில் தரதரவென இழுத்து வந்த இளைஞர் : தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த ஆளுங்கட்சி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 4:16 pm
Former CM Statue Insult - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி சிலையை உடைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் கிருஷ்ணபள்ளி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி உருவச்சிலையை உடைத்த நபர் சாலையில் உருவச்சிலையை இழுத்துச் சென்றார். இதைக்கண்ட ஆளும் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.

கட்சி தொண்டர்களின் தாக்குதலையும் பொருட்படுத்தாது ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர் ரெட்டி மகனான தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி மீதான ஆட்சேபனையை அந்த இளைஞர் தொடர்ந்து தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு எதிராகவும் நடிகர் பவன் கல்யாண் தொடங்கிய ஜன சேனா கட்சிக்கு ஆதரவாக அவர் பேசி வந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பார்வதிபுரம் எம்.எல்.ஏ அலஜங்கி ஜோகாராவ் சம்பவ இடத்தை பார்வையிட்டு உருவச் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் விரைவில் சிலையை புனரமைக்கும் பணி நடைபெறும் என அறிவித்தார்.
உருவச்சிலை உடைத்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கிராம மக்கள் சார்பில் சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உருவச் சிலையை உடைத்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி உருவச் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 625

0

0