காளஹஸ்தி கோவிலில் காணிக்கை எண்ணும் போது களவு : பணம், நகையுடன் சிக்கிய ஊழியர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2021, 1:55 pm
Kalahasthi Theft-Updatenews360
Quick Share

ஆந்திரா : ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது பணத்தை திருடிய ஒப்பந்த ஊழியரை கைது செய்த போலீசார் ரூ.75 ஆயிரம் ரொக்கம், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பிரசித்த பெற்ற ஸ்ரீ காளஹஸ்தி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு நாடெங்கிலும் இருந்து ராகு-கேது பூஜை செய்வதற்கு அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்தக் கோவிலில் கிடைக்கும் காணிக்கைகள் மாதம் ஒரு முறை எண்ணப்படும். அவ்வாறு இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. கோவில் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் ஒப்பந்த ஊழியரான கிரண் என்பவர் பணத்தை எண்ணும் போது சில ரூபாய் நோட்டுக்களை சுருட்டி மறைத்து வைத்துள்ளார். இதைப் பார்த்த அதிகாரிகள் உடனடியாக அவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 75 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு தங்க செயின் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நகை, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவில் வளாகத்தில் உள்ள காவலர்களிடம் அவரை ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கோவிலுக்குள்ளேயே கோவில் ஊழியர் பணத்தை திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 277

0

0