இந்தியாவிற்கு நான்கு தலைநகரங்கள் தேவை..! மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

23 January 2021, 3:38 pm
Mamata_banerjee_updatenews360
Quick Share

இந்தியாவில் டெல்லியைத் தவிர்த்து நான்கு மாற்று தலைநகரங்கள் இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார். 

கொல்கத்தாவிலிருந்து முழு நாட்டையும் பிரிட்டிஷ் ஆட்சி செய்தது என்று கூறிய மம்தா பானர்ஜி, “இந்தியாவில் 4 மாற்று தலைநகரங்கள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவிலிருந்து முழு நாட்டையும் ஆட்சி செய்தனர். ஏன் நம் நாட்டில் ஒரே ஒரு தலைநகரம் இருக்க வேண்டும்?”என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125’வது பிறந்த நாளை முன்னிட்டு கொல்கத்தாவில் நடந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி கூறினார்.

திட்டக் கமிஷன் என்பது நேதாஜியின் கருத்துருவாக்கம் எனக் கூறிய மம்தா பானர்ஜி, திட்டக்கமிஷனை ஒழித்த மத்திய அரசின் முடிவையும் கடுமையாக விமர்சித்தார். நேதாஜி பவனில் அவரது பிறந்தநாளில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, நேதாஜியை நாட்டின் அனைத்து சமூகங்களிடையேயும் ஒற்றுமையை ஆதரித்த ஒரு சின்னமாக வர்ணித்தார்.

ஜனவரி 23 அன்று நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். 
நரேந்திர மோடி அரசு 2014’இல் திட்டக் கமிஷனைக் கலைத்து, நிதி ஆயோக் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி மேலும், “தேர்தலுக்காக நாங்கள் நேதாஜியை நினைவில் கொள்ளவில்லை. அவர் 365 நாட்கள் எங்கள் இதயத்தில் இருக்கிறார். நாங்கள் அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம்.” என்று கூறினார்.

ரவீந்திரநாத் தாகூரால் நேதாஜி தேஷ்நாயக் என்று வர்ணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். “நாங்கள் அவரது பிறந்த நாளை தேஷ்நாயக் திவாஸ் என்று கொண்டாடுகிறோம்” என்று மம்தா பானர்ஜி மேலும் கூறினார்.

Views: - 0

0

0