மூடியிருந்த ஏடிஎம் மெஷினை உடைத்து சாவகாசமாக கொள்ளையடித்து மர்மநபர்

6 October 2020, 7:23 pm
Quick Share

தெலுங்கானா: ஹைதராபாத் நகரில் ஏடிஎம் செண்டரில் கேஸ் கட்டர் மூலம் கட் செய்து ஏடிஎம்மில் இருந்த 15 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையனை ஹைதராபாத் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள சந்தா நகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏடிஎம்மில் பழுது காரணமாக கதவை கீழே இழுத்து விட்டு காவலாளி சென்றுள்ளார். பிறகு பழுது நீக்குவதற்காக இன்று மதியம் ஏடிஎம் சென்டர் திறக்கப்பட்டது. உள்ளே ஏடிஎம் மிஷின் கேஸ் கட்டர் ஆல் கட் செய்யப்பட்டு இருப்பதைக் கண்ட காவலாளி உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து அங்கு வந்த வாங்கி மேலாளர் இதனை பார்வையிட்டார்.

இதில் பெரிய சிலிண்டர் ஒன்றை எடுத்துவந்து உள்ளே வைத்து சாவகாசமாக ஏடிஎம் ஐ கட் செய்து 15 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஏடிஎம் மூடி இருந்ததால் கொள்ளையன் சாவகாசமாக எப்பொழுது வந்து கொள்ளையடித்துச் சென்றான் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 27

0

0