திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் : சென்னையில் இருந்து குடைகள் சமர்ப்பணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2021, 5:53 pm
Tiruchanur Padmavathi Umbrella -Updatenews360
Quick Share

திருப்பதி : திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு சென்னையில் இருந்துகுடைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரமோற்சவம் கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று காலை தாயாரின் பல்லக்கு உற்சவ சேவை நடைபெற்றது.

இன்று இரவு தாயாரின் கஜ வாகன சேவை நடைபெற உள்ள நிலையில் கஜ வாகன சேவையில் அலங்கரிப்பதற்காக சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் ஐந்து வெண்பட்டு குடைகளை பத்மாவதி தாயாருக்கு நன்கொடையாக இன்று சமர்ப்பித்தது.

கோவில் முன் இருக்கும் வாகன மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர் கோபால்ஜி பத்மாவதி தாயார் கோவில் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணாவிடம் குடைகளை சமர்ப்பித்தார்.

பட்டுச்சேலை, மங்கல பொருட்கள் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்கப்பட்ட திருக்குடைகளை தேவஸ்தானம் சார்பில் கோவில் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் கொடையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜிக்கு தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Views: - 189

0

0