போட்டித் தேர்வில் 77’வது இடம்..! ஆனாலும் அரசு வேலை கிடைக்கவில்லை..! விரக்தியில் கேரள இளைஞர் தற்கொலை..!

30 August 2020, 5:43 pm
Death_UpdateNews360
Quick Share

கேரள மாநில போட்டித் தேர்வு ஆணையம் (பி.எஸ்.சி) நடத்திய தேர்வில் 77’வது இடத்தைப் பெற்ற 28 வயது இளைஞன் வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள காரகோனத்தில் வசிக்கும் அனு என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் தனது வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கேரள அரசின் பி.எஸ்.சி. ஆணைய போட்டித் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் எடுத்த நிலையில், கேரள அரசு போட்டித் தேர்வை புறம் தள்ளி தானே நேரடியாக ஆட்களை நியமனம் செய்ததாகக் கூரப்பப்டுகிறது.

இந்நிலையில் இறந்தவரின் உறவினர்கள், பி.எஸ்.சி தேர்வில் தரவரிசை பெற்ற பிறகும் வேலை கிடைக்காததால் அனு மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறினர். அவர்கள் வெளியிட்ட ஒரு தற்கொலைக் குறிப்பில், வேலை கிடைக்கத் தவறியதே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பி.எஸ்.சி தரவரிசைப் பட்டியலைப் புறக்கணித்து ஆட்சேர்ப்பு நடத்திய மாநில அரசே மரணத்திற்கு காரணம் என்று காங்கிரசும் பாஜகவும் குற்றம் சாட்டின. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இறந்தவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏபிவிபி மற்றும் யுவா மோர்ச்சா ஆகியோரும் கேரள தலைமைச் செயலகம் நோக்கி பேரணி அணிவகுப்பை ஏற்பாடு செய்தனர்.

பி.எஸ்.சி.யின் தலைவர் பகிரங்கமாக, பி.எஸ்.சியின் பிம்பத்தை கெடுக்கும் தேர்வர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என்று கூறியிருந்தார். இதன் பின்னர், பி.எஸ்.சி தரவரிசைதாரர்கள் தங்களது சரியான வேலைகள் மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினர். இது குறித்து கேட்டபோது, ​​கேரள முதல்வர் பினராயி விஜயன் பி.எஸ்.சி. ஆணையத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பி.எஸ்.சி. விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினாலே, அவர்களை அரசு வேலைவாய்ப்பில் புறக்கணிப்பதைக் கண்டு, கேரள இளைஞர்கள் கொதித்துப் போய்  உள்ளனர். இந்த அதிருப்தி பி.எஸ்.சி. ஆணையத்திற்கு ஆதரவாக செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் மீதும் எதிரொலித்து வருகிறது.

Views: - 0

0

0