இதென்ன ரயில் நிலையமா இல்லை விமான நிலையமா..? நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பனாரஸ் ரயில் நிலையம்..!
18 August 2020, 5:51 pmஉத்தரபிரதேச அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள மாண்டுவாடி ரயில் நிலையத்தை பனாரஸ் என்று பெயர் மாற்ற உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மாண்டுவாடி ரயில் நிலையத்தை பனாரஸ் என்று பெயரை மாற்றுமாறு கோரியிருந்தது.
மாண்டுவாடி ரயில்நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் இப்போது தடையில்லா சான்றிதழ் வழங்கியதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாரணாசியில் உள்ள மாண்டுவாடி ரயில் நிலையம் கடந்த ஆண்டு உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மாற்றியமைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஒரு விமான நிலையத்தைப் போன்றது.
சமீபத்திய வசதிகளுடன் கூடிய மாண்டுவாடி ரயில் நிலையம் ஒரு விமான நிலையத்திற்கு எந்தவகையிலும் குறைவில்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரமிக்க வைக்கும் கட்டடமும், பயணிகளுக்கான புதிய வசதிகளும் இந்த ரயில் நிலையத்தை விமான நிலையம் போல் மாற்றியுள்ளன.
இந்த ரயில் நிலையத்தில் ஏர் கண்டிஷனிங் வெயிட்டிங் லவுஞ்ச், எஃகு ஓய்வறைகள் மற்றும் எல்.ஈ.டி விளக்குகள் போன்ற வசதிகள் உள்ளன. இந்த வளாகத்தை அழகுபடுத்த இந்திய ரயில்வே நீரூற்றுகளையும் வைத்துள்ளது.
இந்த நிலையத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலை, புட் கோர்ட், டிக்கெட் முன்பதிவு அலுவலகம், காத்திருப்பு அறைகள் மற்றும் பல உள்ளன.
0
0