“எல்லையில் உள்ள வீரர்களுக்கு நன்றி செலுத்தி விளக்கு ஏற்றுவோம்”..! பிரதமர் மோடி ட்வீட்..!

13 November 2020, 7:24 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

தீபாவளிக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், நாட்டைப் பாதுகாக்கும் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விளக்கை ஒளிரச் செய்ய மக்களை ஊக்குவித்தார். 

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், படையினரின் முன்மாதிரியான தைரியம் மற்றும் தியாகத்திற்காக அனைவரும் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

“இந்த தீபாவளி, நம் தேசத்தை அச்சமின்றி பாதுகாக்கும் சிப்பாய்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, ஒரு விளக்கு ஏற்றுவோம். நம் வீரர்களின் முன்மாதிரியான தைரியத்திற்காக நம்மிடம் உள்ள நன்றியுணர்வை உணர்த்துவதற்கு வார்த்தைகளால் முடியாது. எல்லைகளில் உள்ள வீரர்களின் குடும்பங்களுக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று அவர் கூறினார்..

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கமாக உள்ள நிலையில், இந்த ஆண்டும், நாளை அவர் எல்லையில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 23

0

0

1 thought on ““எல்லையில் உள்ள வீரர்களுக்கு நன்றி செலுத்தி விளக்கு ஏற்றுவோம்”..! பிரதமர் மோடி ட்வீட்..!

Comments are closed.