இப்ப இருக்க நிலைமையில இந்த கிஃப்ட் தேவைதான் : மணமக்களை வியப்பில் ஆழ்த்திய அன்பளிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2021, 4:53 pm
Petrol Gift -Updatenews360
Quick Share

தெலங்கானா : சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோகிர் நகரில் நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் மணமக்களுக்கு அன்பளிப்பாக 5 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி உள்ளூர் தலைவர் ஒருவர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் பிரமுகர்கள் பெட்ரோல் விலை உயர்வை குறிப்பிடும் வகையில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலை அன்பளிப்பாக வழங்கினார்.

காங்கிரஸ் பிரமுகர்கள் செயலுக்கு மணமக்களும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றவர்கள் இதனை ஆச்சரியத்துடன் ரசித்தனர்.

Views: - 296

0

1