இது வெறும் ட்ரைலர் தான்..! முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம் வெடிபொருட்கள் இருந்த காரில் கண்டுபிடிப்பு..?

26 February 2021, 3:02 pm
antilia_car_updatenews360
Quick Share

முகேஷ் அம்பானியின் வீடு அமைந்துள்ள மும்பையின் ஆன்டிலியா அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள் நிறைந்த எஸ்யூவி கார் வழக்கு குறித்து மும்பை காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு சிலர் விசாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானியின் பல மாடி வீட்டிற்கு மிக அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த பச்சை நிற ஸ்கார்பியோவில் காணப்பட்ட பையின் உள்ளே இருந்து வெடிக்கும் ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ஒரு அச்சுறுத்தல் கடிதமும் மீட்கப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து காவல்துறையினர் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், “நிதா பாபி மற்றும் முகேஷ் பயா ஆகியோருக்கு இது ஒரு டிரெய்லர் மட்டுமே. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அடுத்த முறை உண்மையாக நடக்கும்.” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட பையில் மும்பை இந்தியன்ஸ் எழுதப்பட்டிருந்தது.

ஸ்கார்பியோவில் ஒரு போலி நம்பர் பிளேட் இருந்தது. இது அம்பானியின் வாகனங்களின் பதிவு எண்களுடன் பொருந்தியது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வாகனத்தின் சேஸ் எண் மற்றும் பிற விவரங்கள் இது மகாராஷ்டிராவுக்கு வெளியில் இருந்து திருடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஜெலட்டின் குச்சிகள் நாக்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணைக் குழுக்கள் அப்பகுதியில் இருந்து சி.சி.டி.வி பதிவுகளைப் பெற்றுள்ளன. எஸ்யூவியின் டிரைவர் காரின் பின்புற வாயிலிலிருந்து கீழே இறங்கியதாக காட்சிகள் காட்டுகின்றன. சந்தேக நபர் தனது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்துள்ளார்.

வொர்லி பக்கத்தில் இருந்து வரும் குறைந்தது மூன்று வெவ்வேறு சிசிடிவி காட்சிகளில் இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மகாராஷ் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகிலுள்ள ஸ்கார்பியோவுக்குள் 20 ஜெலட்டின் வெடிபொருள் குச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் இது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 22

0

0