”இந்த நிலை மாற வேண்டும்” : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பி.வி சிந்து உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2021, 1:58 pm
PV Sindhu - Updatenews360
Quick Share

ஆந்திரா : பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து திருமலையில் இரவு தங்கி இன்று விஐபி பிரேக் தரிசனத்தில் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் நினைவுப் பரிசுகள், வேத ஆசீர்வாதம் ஆகியவை வழங்கப்பட்டன.தொடர்ந்து கோவிலுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிக்கு பின் திருப்பதி மலைக்கு வந்து இருக்கிறேன். ஏழுமலையான் காரணமாக அனைத்தும் நன்றாக நடக்கிறது. இந்தியாவில் சரியான முறையில் விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படவில்லை அல்லது ஊக்குவிக்கப்படவில்லை என்று கருதுகிறேன். இறைவன் அருளால் இந்த நிலை மாறவேண்டும் என்று அப்போது கூறினார்.

Views: - 383

1

0