அம்பாலா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! ரபேல் விமானங்களுக்கு ஆபத்தா..?

22 August 2020, 4:13 pm
rafale_updatenews360
Quick Share

ஐந்து ரஃபேல் விமானங்களின் முதல் தொகுதி நிறுத்தப்பட்டுள்ள,  ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தை வெடிவைத்து தகர்க்க உள்ளதாக மிரட்டல் கடிதம் ஒன்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

அம்பாலா விமான தளம் இந்திய விமானப்படையின் மிக முக்கிய தளங்களில் ஒன்றாகும். இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கிய ரபேல் விமானங்களின் முதல் தொகுதியில் இந்தியா வந்து சேர்ந்த ஐந்து விமானங்களும் அம்பாலா படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கடிதம் நேற்று பெறப்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் என ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அம்பாலா விமானபடை தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே “இந்த கடிதம் ஒரு மோசடி மற்றும் சில குறும்புக்காரர்களின் கைவேலை என்று தோன்றுகிறது” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விமானத் தளம் துல்கோட், பல்தேவ் நகர், கர்னாலா மற்றும் பஞ்சோகாரா உள்ளிட்ட கிராமங்களை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை 1-ஏவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0