டெல்லியில் 3 நாட்கள் நடக்கும் கடற்படை கமாண்டர்கள் மாநாடு இன்று தொடக்கம்!!

19 August 2020, 9:26 am
rajnath singh - updatenews360
Quick Share

டெல்லி : 3 நாட்கள் நடக்கும் கடற்படை கமாண்டர்களின் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.

லடாக்கில் சீனா பிரச்சனையை உருவாக்கியதை தொடர்ந்து இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கேற்றவாறு, ரபேல் போர் விமானங்களும் இந்தியப் படையில் சேர்க்கப்பட்டது. மேலும், ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக பெரிய தொகையையும் ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், கடற்படையில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க 3 நாட்கள் நடக்கும் கடற்படை கமாண்டர்களின் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு, மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்ற இருக்கிறார்.

இராணுவத் தளவாடங்கள், போக்குவரத்து, மனித ஆற்றல் மேம்பாடு, பயிற்சி, நிர்வாகச் செயல்பாடுகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து கடற்படை தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் கடற்படைத் தளபதிகள், மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Views: - 70

0

0