இண்டிகோ விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து: விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!!

15 June 2021, 4:27 pm
indigo-updatenews360
Quick Share

ஹூப்ளி: ஹூப்ளியில் இண்டிகோ விமானம் தரையிறங்கிய போது திடீரேன டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 6 இ -7979, திங்களன்று கர்நாடகத்தின் ஹூப்ளிக்குச் சென்றது. திங்களன்று மாலை கர்நாடகத்தின் ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதை தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தற்போது சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

விமானத்தின் டயர் வெடித்ததால் இந்த திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விமான நிறுவனம், பயணிகள், பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமானம் தற்போது பராமரிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Views: - 184

0

0