திருப்பதி மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

2 September 2020, 6:34 pm
Quick Share

திருப்பதி: திருப்பதி மலை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த சில நாட்கள் முதல் திருப்பதி மலையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாத காலத்தில் திருப்பதி மலையில் சிறுத்தை, புலி, கரடி, மலைப்பாம்பு, மான்கள் ஆகிய வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நெல்லையில் திருப்பதி மலையில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் அஸ்வினி மருத்துவமனை அருகே நேற்றிரவு சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியது. இதுதொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் சிசி கேமராவில் பதிவாகியுள்ளது. விஐபி கெஸ்ட் ஹவுஸ்கள் இருக்கும் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறை முடிவு செய்துள்ளது.

Views: - 7

0

0