திருப்பதியில் திரும்ப, திரும்ப சுற்றும் கொரோனா…! 3 அர்ச்சகர்கள் பலி

10 August 2020, 2:42 pm
Tirupathi Temple - updatenews360
Quick Share

திருமலை: திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் உள்பட 743 பேருக்கு கொரோனா உறுதியாக, 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மார்ச் 19ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஆனாலும் தினமும் அனைத்து ஆராதனைகள், பூஜைகள், வழக்கம் போல் நடைபெற்றன. திருப்பதி கோவில் வரலாற்றில் 120 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வருகை நிறுத்தப்படுவது இதுதான் முதன் முறையாகும்.

இந் நிலையில் நாடு முழுவதும் ஜூன் 8ம் தேதி முதல் கோவில்களை திறக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அறிவித்தது.  கிட்டத்தட்ட 83 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த திருப்பதி கோவில் ஜூன் 11ம் தேதி திறக்கப்பட்டது.

அதன்படி, 83 நாட்கள் கழித்து திருப்பதி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் அர்ச்சகர்களில் சிலருக்கு கொரோனா உறுதியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

ஆனாலும் கொரோனா தொற்று பலருக்கும் பரவியது.  இந் நிலையில்  தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் 743 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அவர்களில் 3 பேர் பலியாகி விட்டனர்.  402 பேர் குணமாக இன்னமும் 338 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

உண்டியலை திறக்க, கோவில் திறக்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. பக்தர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப கோவில் திறக்கப்பட்டது என்றார்.

Views: - 4

0

0