திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் ஊழியர்களுக்கு கொரோனா.! 2 மாதத்தில் 743 பேருக்கு உறுதியானது.!!
9 August 2020, 4:52 pmதிருப்பதி : இரண்டு மாதத்தில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் உப்பட 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோரில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 402 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர். 338 பேர் சிகிச்சை பெறுகின்றனர், 3 பேர் உயிரிழந்தனர் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஜூலை மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டு, ரூ 16 கோடியே 69 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர். 11 லட்சத்து 35 ஆயிரம் லட்டுக்கள் இரண்டு மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். எவ்வித தடையுமின்றி பக்தர்கள் தொடர்ந்து ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.